ஆனால் இது ஒரு வித்தியாசமான பதிவு. பதிக்கும் முன்பே பின்னூட்டம் பெற்ற முதல் பதிவே சில வேளை இதுவாகத் தான் இருக்கும். எனவே இப்பதிவிற்கு ஏற்கெனவே கிடைத்த "பாராட்டு" பின்னூட்டத்தையும் அதற்கு நான் அளித்த நன்றியையும் முதலில் பதித்து விட்டு பின்னர் விஷயத்துக்கு வருகிறேன்.
இது இப்பதிவினைக் குறித்தும் "ஈனப்பிறவிகளைக்" குறித்தும் கருத்திடுபவர்களுக்கு வெகுவாக உதவலாம். இந்த பாராட்டினைத் தெரிவித்தவர் சகோதரர் ஸ்ரீநிதி அவர்கள். இதே பாராட்டினை இங்கு இடுபவர்கள் சகோதரர் ஸ்ரீநிதி அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறார்கள்.
இனி சகோதரர் ஸ்ரீநிதி அவர்களின் "பாராட்டு" பின்னூட்டம்:
//இறைவன் நாடினால் நாளை "ஈனப்பிறவிகளைக்" குறித்த மாறுபட்ட கண்ணோட்டத்துடன் கூடிய ஓர் சிறந்த வலைப்பதிவு படம் இங்கு காண்பிக்கப்படும். காணத்தவறாதீர்கள்//
The god of a perveted mind will also be a perverted being.
இதற்கு நான் அளித்த நன்றி பின்னூட்டம்:
நன்றி உங்களின் பாராட்டுக்களுக்கு(!??!). "ஈனப்பிறவி" என்ற வார்த்தை உபயோகத்துக்கு இதனை விட சிறந்த ஒரு பாராட்டு கிடையாது என்பதில் நானும் உங்களுடன் உடன்படுகிறேன்.
நான் இன்னும் "ஈனப்பிறவி" பதிவே தயார் செய்யவில்லை. அதற்குள் என் மனதிலுள்ளதை சரியாக பிடித்து விட்டீர்களே. நீங்கள் கில்லாடி தான் போங்கள்.
விரைவில் "ஈனப்பிறவி" படம் போடுகிறேன்.
அப்பதிவிலும் நீங்கள் கண்டிப்பாக இந்த கமெண்டை வைக்கவேண்டும் என உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் என் மன ஓட்டத்தோடு இணைந்து "ஈனப்பிறவி" வார்த்தையை உபயோகித்தவருக்கு மேற்கண்ட அருமையான "பாராட்டை(!!??)" தெரிவித்த உங்களுக்கு நன்றிகள் பல ஆயிரம்.
நன்றியுடன்
இறை நேசன்.
இனி "ஈனப்பிறவிகளைக்" குறித்து:
நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.
"முண்டாசு கவி" பாரதியாரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. "அச்சமில்லை" வரிகள் மனதில் வருபவர்களுக்கு கண்டிப்பாக இவரின் முறுக்கு மீசையும், தலைப்பாகையும் கூடவே பல புரட்சிப் பாடல்களும் நினைவுக்கு வரும். இவரைக் குறித்து பல விமர்சனங்கள் திண்ணைகளிலும் கூடங்களிலும் பேசப்படுகின்றன.
அவற்றில் முக்கியமானவை, தனது சிறை விடுதலைக்காக "ஆங்கிலேயர்களிடம் இனி சுதந்திரப்போரில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து சுதந்திரப்போராட்டத்தில் இருந்து ஒதுங்கியவர்" என்பதும், "சாதிவெறிப் பிடித்தவர்" என்பதும்.
இவற்றைக் குறித்து பலர் ஆதாரங்களுடன் "அசுரத்தனமாக" கத்தியாயிற்று. நம் விஷயம் அதுவல்ல.
பாரதியார் மீதான "சாதி வெறிப்பிடித்தவர்" என்ற குற்றச்சாட்டை வைத்தவர்கள் அதற்கு ஆதாரமாக நாராயணப்பிள்ளை என்ற பார்ப்பனர் அல்லாதவர் அவரின் மகனுக்கு பாரதியாரின் மகளை பெண் கேட்டதாகவும் அதனைக் கேட்ட பாரதியார் மிகுந்த கோபத்துடன் அவரிடம் ஆவேசப்பட்டு பெண் தர மறுத்ததையும் குறிப்பிட்டனர். நமது விஷயம் இதுவுமல்ல.
பாரதியாரைக் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலெழுதிய "காந்தியை கொன்ற கோட்சேயின் செயலை நியாயபடுத்திய" திரு மலர் மன்னன் அவர்கள் இதற்கும் சில நியாயப்படுத்துதல்களை செய்துள்ளார்.
அதாவது "பாரதியாரிடம் பெண்கேட்ட பிராமணர் அல்லாத நாராயணப்பிள்ளை "இயலாத நிலையிலிருந்த" ஓர் பிராமணரின் மனைவியுடன் "தொடர்பு" வைத்திருந்தார். அதனால் தான் பாரதியார் தனது மகளை அவரின் மகனுக்கு திருமணம் முடித்துக் கொடுக்க சம்மதிக்கவில்லை இல்லாமல் பாரதியாருக்கு பிராமண சாதி வெறி ஒன்றும் இல்லை" என அவரின் நிலைபாட்டினை நியாயப்படுத்துகிறார்.
அவருக்கு சாதி வெறி இருந்ததோ இல்லையோ இங்கு அதுவல்ல முக்கியம். "பிராமணர் அல்லாத நாராயண பிள்ளை இயலாத நிலையிலிருந்த ஓர் பிராமணனின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததை கூற வந்த திரு. மலர் மன்னன் அந்த பிராமணன் அல்லாத நாராயணபிள்ளைக்கு ஓர் பட்டம் கொடுத்தார். அது தான் இங்கு முக்கியம்.
இனி திரு. மலர் மன்னனின் வார்த்தைகளில் இருந்து......
"ஒரு சக்கிலியக் குடும்பத்திலோ பறையர் குடும்பத்திலோ பெண் எடுக்க மனம் இல்லாத மேல் சாதி பிராமணரல்லாதவருக்கு பிராமணரான பாரதியார் வீட்டுப் பெண் கேட்கிறது! ஆதுதான் அவருக்குத் தெரிந்த சாதியொழிப்பு! அதிலும் இயலாமையிலே இருந்த பிராமணரான பாரதியாரிடம்தான் அவருக்கு அவ்வாறு கேட்கிற துணிவு வந்திருக்கிறது! மேலும் மிகவும் இயாலமையிலிருந்த ஒரு பிராமணர் மனைவியைக் கள்ளத்தனமாக வைத்துக்கொள்கிற கொழுப்பும் அந்த நபருக்கு இருந்திருக்கிறது! அந்தக் கொழுப்புதான் பாரதியாரிடம் அப்படிக் கேட்கிற துணிவையும் கொடுத்திருக்கிறது! இப்படிப்பட்ட ஒரு ஈனப் பிறவி பாரதியாரிடம் தன் மகனுக்குப் பெண் கேட்கிறது தைரியமாக!"
நாம் இங்கு ஜாதியைக் குறித்தோ பார்ப்பன ஜாதிவெறியைக் குறித்தோ கேள்வி எழுப்ப விரும்பவில்லை. பார்ப்பன ஜாதிவெறி திரு. மலர் மன்னனுக்கா அல்லது "ஜாதிகள் இல்லையடி பாப்பா" எனப்பாடிய பாரதியாருக்கா என்றும் பட்டிமன்றம் நடத்த விரும்பவில்லை.
நாம் கேட்க விரும்புவதெல்லாம்,
"விரும்பும் ஆடவரோடு உறவு கொள்வது பெண்களின் உரிமை என்றும் அவ்வாறு செய்யும் பொழுது கர்ப்பமடையாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு கர்ப்பமடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்" என்பதைக் குறித்து ஆலோசனைகள் கூறுவதை "முற்போக்கான பெண்ணியவாதியின் பண்பு என சிறப்பித்துக் கூறும் இன்றைய தமிழ் சமூகத்தில் வாழும் திரு. மலர்மன்னன் அவர்கள், அவ்வாறு தான் விரும்பும் ஆடவனோடு தொடர்பு வைத்திருந்த இயலாமையிலிருந்த ஓர் பிராமணரின் மனைவியின் உரிமையை நிலைநாட்ட உதவும் விதத்தில் அந்த பெண்ணோடு தொடர்பு வைத்திருந்த பிராமணரல்லாத அந்த "பெண்விடுதலைவாதிக்கு" "ஈனப்பிறவி" என பட்டம் கொடுத்தது என்ன விதத்தில் நியாயம்?
சரி அவ்வாறு வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைப்பவர் "ஈனப்பிறவி" எனில், அவரே அவருடைய பதிவில் "பாரதியாருக்கு கண்ணம்மா என்ற பெண்ணோடு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது" எனக் கூறுகிறாரே. அவ்வாறெனில் திரு. மலர்மன்னனின் பார்வையில் பாரதியாரும் "ஈனப்பிறவி" தானா? இதற்கு திரு. மலர்மன்னன் என்ன விளக்கம் வைத்திருக்கிறார்?
"கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர்."
மேற்கண்ட கருத்து "முற்போக்கு பெண்ணியவாதி" திரு. டோண்டு அவர்களுடையது. இதன் அடிப்படையில் இப்பெண்களுடன் தொடர்பு கொண்ட ஆண்கள் அனைவரும் "ஈனப்பிறவிகளா"? இவ்வாறு மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் ஆண்கள் அனைவரையும் "ஈனப்பிறவிகள்" எனக் கூறிவிட்டால் "ரோசமுள்ள" எந்த ஆணாவது "பெண்களின் உரிமையை" நிலை நாட்ட முன்வருவார்களா?
திரு. மலர் மன்னன் அவர்கள் இவ்வாறு கூறுவது பெண் விடுதலைக்கு எதிரான பிற்போக்கான கருத்துக்களாகும் என்பதை மட்டுமே "முற்போக்கான பெண்ணியவாதிகளின்" சார்பாக கூற வேண்டியுள்ளது.
திரு. மலர்மன்னன் அவர்களுக்கு:
மிகவும் இயலாமையிலிருந்த ஒரு பிராமணர் மனைவியை கள்ளத்தனமாக வைத்துக் கொண்ட பிராமணரல்லாத அந்த நபருக்குப் பட்டம் "ஈனப்பிறவி" எனில், 'இயலாமையிலிருந்த' தன்னுடைய பிராமண கணவரை விட்டு கள்ளத்தனமாக அந்த பிராமணரல்லாத "ஈனப்பிறவி" நபரிடம் போன அந்த பிராமண பெண்மணிக்கும், இது போன்று தான் விரும்பும் ஆடவனுடன் உறவு வைத்துக் கொள்வதை "முற்போக்கு பெண்ணுரிமை" எனக் கொண்டு நடக்கும் பெண்களுக்கும், இதனை நியாயப்படுத்தி இளைய சமுதாயத்துக்கு அரிய மிகச் சிறந்த "ஆலோசனைகள்" வழங்கும் "முற்போக்கு பெண்ணியவாதிகளுக்கும்" என்ன பட்ட,ம் கொடுக்கவேண்டும் என்பதை உணர்வுள்ள, தன்மானமுள்ள, தமிழ்பண்பாட்டை இன்னமும் மனதில் கொண்டு நடக்கும் "பிற்போக்குவாதி" திரு. மலர்மன்னன் அவர்களிடமே விட்டு விடுவிடுகிறேன்.
முக்கிய பின் குறிப்பு:
சகோ. ஸ்ரீநிதி அவர்களிடமிருந்து "ஈனப்பிறவிக்கான", "பாராட்டு" பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன்.