Thursday, April 20, 2006

நேபாளத்தில் என்ன நடக்கிறது?

நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக நடக்கும் பேரணிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அதேவேளை ஆர்ப்பாட்டக் காரர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் மன்னர் ஞானேந்திராவின் போக்கும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.

நேபாளத்தில் பிரமாண்ட பேரணி நடத்திய அரசியல் கட்சிகள் மீது ராணுவத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார் மன்னர். மேலும் உணவுப் பொருள், எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஜனநாயக ஆட்சியை உருவாக்க வலியுறுத்தி 20ம் தேதி அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன பேரணி நடத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. போராட்டம் தொடர்வதால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நேபாளத்தில் ஞானேந்திரா தலைமையிலான மன்னராட்சி நடந்து வருகிறது. மன்னராட்சியை அகற்றி விட்டு ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் , வக்கீல்கள் , மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த எட்டாம் தேதியிலிருந்து தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளும் மன்னராட்சிக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி 20ம் தேதி மிகப் பெரிய கண்டன பேரணி நடத்தப்போவதாக ஏழு அரசியல் கட்சிகள் அடங்கிய போராட்டக் குழு அறிவித்திருந்தது.

இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர் ஒருவர் கூறும்போது ," எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகரில் மிகப் பெரிய அளவிலான கண்டன பேரணி 20ம் தேதி நடத்தப்படும். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர். அரசு இதற்கு எத்தகைய தடை விதித்ததாலும் , அதனை மீறி பேரணி நடத்துவோம்' என்றார்.

அரசு செய்தி தொடர்பாளரும், தொலை தொடர்பு துறை அமைச்சருமான சும்ஷர் ராணா கூறும்போது ,"பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிப் பணிகள் முடங்கியுள்ளன. உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பணவீக்கம் இரண்டு இலக்க அளவிற்கு உயர்ந்து விட்டது. இதே நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதர நிலை சீர்குலையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து நேபாள காங்கிரஸ் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் சேகர் கொய்ராலா கூறியதாவது:

நேபாளத்தில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதற்கு இந்தியா உதவ வேண்டும். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் மன்னராட்சிக்கு எதிராக நெருக்கடி தர வேண்டும். மன்னராட்சியில் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களுக்கான விசாவை சர்வதேச நாடுகள் ரத்து செய்ய வேண்டும். வெளிநாடுகளில் அவர்களுக்கு உள்ள சொத்துக்களையும் முடக்க வேண்டும். அவர்களின் வெளிநாட்டு வங்கி கணக்குகளையும் முடக்க வேண்டும்.

இவ்வாறு சேகர் கொய்ராலா கூறினார்.

பிரதமரின் சிறப்பு தூதுவராக நேபாளம் சென்றார் கரண்சிங் : நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. கடந்த ஞாயிறன்று நேபாள நாட்டிற்கான இந்திய தூதர் சிவ் முகர்ஜி , மன்னர் ஞானேந்திராவைச் சந்தித்து அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை துவக்கும்படி வலியுறுத்தினார். அடுத்த கட்ட நடவடிக்கையாக இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமரின் சிறப்புத் தூதராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கரண்சிங் காத்மாண்டு சென்றார். ராஜ்ய சபா எம்.பி.,யும் , ஜம்மு காஷ்மீர் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவருமான கரண்சிங் , காத்மாண்டுவில் மன்னர் ஞானேந்திரா மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தார். அவர்களுடன் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கரண்சிங்கும் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் என்பதால், மன்னர் ஞானேந்திராவுடன் அவருக்கு உள்ள நெருங்கிய உறவு, பிரச்னையை தீர்ப்பதற்கு உதவும் என வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

நேபாளத்தில் நடக்கும் இந்த அடக்குமுறை நிச்சயமாக மனித உரிமைக்கு எதிரானதாகும். காஷ்மீர் பண்டிட்டுகள், பங்களாதேஷ் இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கிறோம் என்ற பாவனையில் இஸ்லாத்திற்கு எதிராக அவ்வப்போது விஷம் கக்கக் காத்திருக்கும் சங் பரிவாரின் வலைப்பதிவுக் கூலிப் பட்டாளம் இப்பிரச்னையில் காத்துவரும் அழுத்தமான மௌனம் பல கேள்விகளை எழுப்புகிறது. ஒருவேளை இந்தப் பிரச்சனையில் இறந்தவர்கள் யாரும் உயர்சாதியினர் இல்லையோ?

அடப்பாவிகளா இறப்பவர்கள் நம் சகோதரர்கள் தானே! அவர்களுக்கு ஆதரவாக ஈனஸ்வரத்தில் கூட நீங்கள் முனகவில்லையே. உங்களுக்குப் படியளக்கும் சங் மேலிடம் இவ்விஷயத்தில் மௌனம் காக்க உமக்கு உத்தரவிட்டுவிட்டதோ?


தொடர்புடைய சுட்டிகள்:

http://in.news.yahoo.com/060420/137/63okb.html

http://www.dailythanthi.com/article.asp?NewsID=252640&disdate=4/18/2006

Thursday, April 6, 2006

இரத்த யாத்திரைகள்!

மீண்டும் நாடெங்கும் மதவெறிக்கலவரங்களை ­மூளச்செய்து, நாட்டை இரத்தக் களறியாக்க இந்துத்துவாவாதிகள் திட்டமிட்டுவிட்டனர்.

அத்வானி, பா.ச.க. தலைவர் இராஜ்நாத்சிங் ஆகியோர் மற்றொரு ரத யாத்திரை நடத்த திட்டமிடடு இன்று அதனைத் துவக்க உள்ளனர்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் தங்களுடைய வேத கால ஆட்சியை நிறுவுவதற்கு ஏதுவாக அரசியலில் பாரதீய சனதா கட்சி என்ற பெயரில் களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ், தங்களின் மறைமுக அஜெண்டாவை நிறைவேற்றுவதற்கு தேசியவாதம், இந்து ஐக்கியவாதம் போன்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளை முன் வைத்து அப்பாவி மக்களை தங்களுடைய வலையில் விழ வைக்கின்றனர்.

கடந்த 5 வருட காலத்தில் பாரதீய சனதாவின் தீய முகம் இனபடுகொலை, மதக் கலவரம், இலஞ்சம் போன்ற பல ரூபங்களில் வெளிப்பட்டுள்ளது. தங்களின் கோர முகம் வெளிப்படும் போதோ அல்லது தங்களுக்குள்ளேயே கோஷ்டி மோதல் உருவாகும் போதோ அதிசயமாக நாட்டில் ஏதாவதொரு அசம்பாவிதம் நடந்து விடுகிறது.(பாராளுமன்ற தாக்குதலிலிருந்து தற்போதைய காசி குண்டு வெடிப்பு சம்பவம் வரை எல்லா சம்பவங்களின் போதும் பாரதீய சனதாவிற்குள் ஏதாவதொரு நாற்றமெடுக்கும் சம்பவம் நடந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்).

இவர்களின் ரத யாத்திரை, கர சேவை போன்ற இரத்தம் தோய்ந்த டெக்னிக்குக்ளை இச்சம்பவங்களின் ஊடாகத் தான் காணப்பட வேன்டும். ஒவ்வொரு முறையும் தங்களை நிலை நிறுத்த தங்கள் கோர முகத்தை, தங்களுடைய அசிங்கங்களை மக்கள் மனதிலிருந்து திசை திருப்ப இவர்கள் நடத்தும் நாடகம் தான் இந்த ரத்த யாத்திரைகளும் கரசேவைகளும்.

அந்த வரிசையில் இதோ மற்றொரு ரத்த யாத்திரைக்கு இந்த இரத்த வெறிப்பிடித்த சங்க் கூட்டம் தயாராகி விட்டது. இந்த யாத்திரையின் நோக்கம் -காசி குண்டு வெடிப்பை கண்டிப்பதாம்.

இந்த ரத்த யாத்திரைகளின் உண்மையான நோக்கம் என்ன என்பதை ஒவ்வொரு ரத்த யாத்திரைகளின் பின் விளைவுகளை வைத்து கணக்கிடலாம்.


ஏற்கெனவே இந்துத்துவாவாதிகள் நடத்திய பல ரத யாத்திரைகளின் விளைவாக ஏற்பட்ட விபரீதங்களின் வடுக்கள் இன்னமும் மறையவில்லை.

1990 ஆம் ஆண்டு செப்டம்பரில் சோமநாதபுரத்தில் தொடங்கி 8 மாநிலங்கள் வழியாகச் சென்று அக்டோபர் 30ஆம் தேதி அயோத்தியில் முடிவடையும் வகையில் இராமர் ரத யாத்திரையை அத்வானி நடத்தினார்.

இந்த ரத யாத்திரை சென்ற வழி நெடுக மதக் கலவரங்கள் ­மூண்டன. ஏராளமான அப்பாவி மக்கள் மாண்டனர்.

ரத யாத்திரை தொடங்கும் போதே அதற்குத் தடைவிதிக்கத் தவறிய பிரதமர் வி.பி.சிங்கின் அரசு கலவரங்கள் வெடித்த பிறகு அக்டோபர் 21ஆம் தேதி அன்று பீகாரில் அத்வானியை கைது செய்தது.

அக்டோபர் 30ஆம் தேதி அத்வானியின் ரத யாத்திரை அயோத்தியில் முடிவடைந்து அங்கு கரசேவை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்வானி கைது செய்யப்பட்டாலும் சங்கப்பரிவாரம் பெரும் திரளை அயோத்தியில் கூட்டியது. அப்போது ­மூண்ட கலவரத்தில் 22 பேர் மாண்டனர்.

மாண்டுபோன 22 பேரின் அஸ்திகளை வைத்து மற்றொரு யாத்திரையை சங்கப்பரிவாரங்கள் நடத்தின. அஸ்தி கலசங்கள் சென்ற வழி நெடுகிலும் மதக்கலவரங்கள் ­மூண்டு நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

குருதி ருசி கண்ட சங்கப்பரிவாரம் இத்துடன் நிற்கவில்லை.

1991ஆம் ஆண்டு பா.ச.க. தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோசி குமரி முதல் காசுமீர் வரை ""ஏக்தா யாத்திரையை"" தொடங்கினார். இந்த யாத்திரையும் முசுலீம்களையும், சிறுபான்மையினரையும் தாக்குவதில் முடிந்தது.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அன்று அயோத்தியில் மற்றொரு கரசேவை நடத்தப்போவதாக விசுவ இந்து பரிசத் அறிவித்தது.

அன்று அத்வானி, முரளி மனோகர் ஜோசி, அசோக் சிங்கால், தொகாடியா, உமாபாரதி மற்றும் பாச.க. தலைவர்கள் முன்னிலையில் இந்து வெறியர் கூட்டம் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்தது. மேற்கண்ட தலைவர்கள் யாரும் இந்த அடாத செயலை தடுத்து நிறுத்த முன்வரவில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் எதிரொலியாகத் தேசமெங்கும் பெரும் கலவரங்கள் மூ­ண்டன.
பம்பாயில் நடைபெற்ற கலவரத்தில் 51 பேர் மாண்டனர். காவல்துறையினர் சுட்டதில் 152 பேர் கொல்லப்பட்டனர்.

மகாராட்டிரா, குசராத், உத்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம், இராசஸ்தான், பீகார், மேற்கு வங்கம், அசாம், கர்நாடகம், தில்லி ஆகிய மாநலங்களில் நடைபெற்ற கலவரங்களில் 1200 பேருக்கு மேல் மாண்டனர்.

கடந்த கால வரலாறு கூறும் இந்த உண்மைகளை மறந்துவிடக்கூடாது. மதக்கலவரங்களை நடத்துவதன் ­மூலம் மட்டுமே தாங்கள் வளர்ச்சி பெற முடியும் என இந்துத்துவாவாதிகள் கருதுகின்றனர். எனவேதான் ரத யாத்திரைகள், கரசேவைகள் ஆகியவற்றை அடிக்கடி நடத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள். இத்தகைய போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

அத்வானி, இராஜ்நாத் சிங் தொடங்க இருக்கும் ரத யாத்திரை உடனடியாகத் தடைசெய்யப்பட வேண்டும். மத வாதத்திற்கு எதிரான அனைத்துக் மக்களும் ஒன்று சேர்ந்து சங்கப்பரிவாரத்தின் முக­மூடியைக் கிழித்தெறிய முற்படவேண்டும்.

நன்றி:- தென் செய்தி

Tuesday, April 4, 2006

பொய்யற்க!

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்!

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்;
தர்மம் மறுபடியும் வெல்லும்!

சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது;
அசத்தியம் அழிந்தே தீரும்!