Tuesday, February 28, 2006
உலகை அச்சுறுத்தும் தள்ளு வண்டி!
மேலே காணும் இந்த தள்ளு வண்டி வெறும் பாரம் ஏற்றும் வண்டி மட்டுமல்ல. தனக்கு தேவையான பாரத்தினை தானே தயார் செய்யும் ஓர் வித்தியாசமான வண்டி. தனது தடையில்லா ஓட்டத்திற்கு எதிர்காலத்தில் பிரச்சினையாக வரும் என யாரையெல்லாம் நினைக்கிறதோ அவர்களை, குழந்தைகள், வயோதிகர்கள், அப்பாவிகள், பெண்கள் அடக்கம் அத்தனை பேரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்று அதில் கிடைக்கும் இரத்தத்தை தனது வண்டிக்கு எரிபொருளாக உபயோகித்துக் கொண்டு தனது அடுத்த இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் அதி பயங்கர இரத்த வெறி பிடித்த கொலைகார கொடூர வண்டி.
இவ்வண்டி கடந்து வந்த கோர பாதைகளை இரண்டாம் உலகப் போரிலிருந்து கணக்கு கூட்ட ஆரம்பிக்கலாம். ஹிரோஷிமா, நாகசாகியிலிருந்து வியட்னாம், ஆப்கான், ஈராக் என கடந்த வெறும் 65௭0 வருட காலத்தில் கோடி கணக்கான விலைமதிப்பற்ற மனித உயிர்களையும், சொத்துக்களையும் சூறையாடிக் கொண்டு இரத்த வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கிறது. இதோ இப்பொழுது அடுத்த இலக்காக ஈரானையும், சிரியாவையும் குறி வைத்தாயிற்று. இனி அங்கே நுழைய வேண்டியது தான் பாக்கி. அதற்குண்டான அனைத்து தகிடுதத்தங்களையும் இனி செய்யும். எங்கிருந்தெல்லாம் முனகல் ஒலி கேட்கும் என நினைக்கிறதோ அப்பக்கமெல்லாம் தனக்கு வாலாட்ட எலும்புத் துண்டுகளையும் வீசி எறிய ஆரம்பித்தாகி விட்டது.
இந்த கொடூரமான வண்டியின் பாதையை கண்காணித்து செம்மைப் படுத்த வேண்டியவர்களோ, இவ்வண்டி கடந்து வரும் பாதையில் ஏற்படுத்தும் கோடூர செயல்களினால் விளையும் இரத்த எச்சங்களை சுவைக்க நாக்கைத் தொங்க விட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர். சரி வேறு யாராவது வந்து இதன் பாதையை செம்மைப் படுத்த முயல்வார்கள் என நினைத்தால் வருபவர்கள் ஆத்திர அவசரப் பட்டு இவ்வண்டியை முடமாக்குகின்றோம் எனக் கூறிக் கொண்டு இவ்வண்டி செய்யும் அதே காரியத்தை செய்கின்றனர். பாதிப்பு அனைத்தும் அப்பாவி மக்களுக்கே! இதற்கு விடிவு காலம் எப்பொழுதோ!
Monday, February 13, 2006
கிறிஸ்தவப் பழங்குடி மக்களைக் குறி வைக்கும் சங் கூட்டம்
மதச் சார்பற்ற நம் தேசமாம் இந்தியாவில் சிறுபான்மையினரை ஒழித்துக் கட்டிவிட்டு இந்துத்துவாவை நிறுவியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் காவிக்கூட்டம், முதலில் தங்கள் குஜராத் 'சோதனை' முயற்சியில் முஸ்லிம்களைக் கூட்டம் கூட்டமாகக் கருவறுத்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டது.
தற்போது அதே குஜராத்தின் தெற்குப் பகுதியில் உள்ள டாங்ஸ் மாவட்டத்தில் மூன்று நாட்கள் 'ஷபரி கும்ப மேளா' என்கிற பெயரில், அந்த மாவட்டத்தில் இருக்கும் கிறிஸ்தவச் சிறுபான்மையினரைக் கருவறுக்கத் திட்டம் வகுத்துள்ளது. இந்த மாவட்டத்தில் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டுள்ளப் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
1990களில் இங்கு இந்துக்களுக்கும் கிறிஸ்தவப் பழங்குடியினருக்கும் மிகப் பெரும் கலவரம் வெடித்தது. தற்போதும் அதே போன்று சதியை அரங்கேற்ற காவிக்கும்பல்களான VHP, RSS மற்றும் BJP போன்றவை முயல்கின்றன.
கிறிஸ்தவர்களின் வீடுகளை எளிதில் 'அடையாளம்' காண இந்துக்களின் வீடுகளில் எல்லாம் காவிக்கொடியைப் பறக்கவிடுமாறு 'கேட்டுக் கொள்ளப்' பட்டுள்ளார்களாம். டாங்ஸ் மாவட்டத்தில் சுமார் 15 சதவீத மக்கள் கிறிஸ்தவர்களாவர்.
இம்மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள்தொகை அதிகரிப்பது இந்தக் காவிக் கும்பலுக்கு 'கவலை' அளிப்பதால், பழங்குடியினரை 'மீட்டு' எடுக்கப் போகிறார்களாம். மிஷினரிகளை வெற்றி பெற விட மாட்டோம் என்றும் இவர்கள் சூளுரைத்துள்ளார்களாம்.
எந்தவிதமான அசம்பாவிதம் நடக்காமலிருக்க மாநிலக் காவல்துறை 'தகுந்த' நடவடிக்கை எடுத்துள்ளார்களாம்..
பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்து ஒதுக்கி வைக்கப் பட்டதால் மனம் வெதும்பித்தானே இந்த மக்கள் இந்த சனாதனக் கட்டமைப்பை விட்டி ஓடுகிறார்கள்; முதலில் அதனைச் சரி செய்ய வக்கில்லாமல் என்ன மீட்கப் போகிறார்கள் இந்த வீரர்கள்?
குஜராத் காவல்துறையின் 'தகுந்த' நடவடிக்கையைத் தான் ஒருமுறை பார்த்துவிட்டோமே! ஆடுகளைக் காக்க வேண்டிய வேலி ஓநாய்க்குக் காவலாய் இருந்து வரலாற்றில் மாறா இழிவை பன்னாட்டு அரங்கில் இந்தியாவிற்கு வாங்கித் தந்தனரே இந்தக் காவி(லி)கள்!

Tuesday, February 7, 2006
பாப யோனயஸ்த்ரியோ...?
திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் வீரமணி அவர்கள் தமிழினம் அறிந்த தலைவர். தந்தை பெரியார் அவர்களுக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக பணியாற்றி வருபவர். ஆரம்பம் தொட்டு இன்று வரை ஈழத் தமிழர்களின் விடிவுக்காக குரல் கொடுத்து வருபவர். சென்ற 29 டிசம்பர் அன்று சென்னையில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டை நடத்தி மீண்டும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் ஆதரவு நிலை வருவதற்கு வழிவகுத்தவர். இனவிடுதலையும் பகுத்தறிவும் இரு கண்கள் என வாழும் தலைவர் வீரமணி அவர்களை பேட்டி காண வெப்ஈழம் விரும்பியது. தன்னுடைய வேலைப்பளுக்களின் மத்தியிலும் வெப்ஈழம் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு தன்னுடைய பதிலை வீரமணி அவர்கள் தந்திருக்கிறார். முகம் சுளிக்கக்கூடிய கேள்விகள் என்று கருதப்பட்டவைகளுக்கும் வீரமணி அவர்கள் தயங்காது பதிலளித்திருக்கிறார். டாக்டர் வீரமணி அவர்களுக்கு வெப்ஈழத்தின் நன்றிகள்.
வெப்ஈழம்: பெரியார் வாழ்ந்த மண்ணில் இன்று மதவாதம் பெருகி வருகின்றது. திராவிடப் பாராம்பரியத்தில் வந்த கட்சிகளான திமுகவும் அதிமுகவும் அதிலிருந்து விலகிச்செல்கின்றன. அதிமுக கட்சியினர் வேல்குத்தி வழிபடுகின்றனர். ஆதன் தலைமை கூட யாகங்கள் நடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திமுகவின் முக்கிய தலைவர்கள் பூமிபூஜை நடத்துகின்றார்கள். இவைகளை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள். இவைகளை திராவிடக் கொள்கைகளின் தோல்வியாகக் கொள்ளலாமா?
வீரமணி: தந்தை பெரியார் ஒரு முழுப் பகுத்தறிவுவாதி, மனிதநேயர். ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, "அனைவர்க்கும் அனைத்தும்" எனும் தத்துவம், சுயமரியாதை - இவை அனைத்தும் பெரியார் அவர்களுடைய சமூகப் புரட்சிச் சிந்தனைகள் - அவரது மானுடப் பற்றிலிருந்து மலர்ந்தவை. இவைகளை நாம் அடைய வேண்டுமானால், அதற்கு நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க இடையறாத பிரச்சாரம், போராட்டம் மூலமே முடியும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு நாம் அழுத்தம் கொடுத்து இக் கொள்கைகளை சாதிக்கலாம். அதற்காக நாம் அரசியலுக்கு, பதவிக்குப் போனால் இவற்றை மெல்ல மெல்ல விட்டு - பதவிக்கு வருவது எப்படி, அதனை தக்க வைப்பது எப்படி அதனைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதையே சதா சர்வ காலமும் சிந்தித்து, வாக்கு வங்கிக்கு ஏற்ப, மக்களை நாம் வழி நடத்திச் செல்வதிற்க பதில், நாம் மக்களின் பின்னால் செல்ல வேண்டி வந்துவிடும். இதனாற்தான் 1939இலேயே தனக்கு வந்த முதலமைச்சர் பதவியை உதறித் தள்ளினார் தந்தை பெரியார்.
1949இல் திமுக பிரிந்தது. 1957இல் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதென தீர்மானித்தது. 1972 இல் அதிமுக பிரிந்தது. (எம்ஜிஆர்). இவை இரண்டு திராவிட முத்திரை பெற்ற திராவிட மண்ணின் கட்சிகள் என்றாலும், பதவிக்கு வருவதற்கு அவர்கள் பகுத்தறிவுக் கொள்கைகளில் இருந்து பெரிதும் தடம் புரண்டுவிட்டனர். அவர்கள் "அரசியல் மோகினியின்" பின்னால் சென்றதன் விளைவு இது.
திராவிடர் கழகம் என்பது தாய்க்கழகம். உண்மையில் அதன் பணியை துவக்கத்திலிருந்த நிலையிலேயே செய்து வெற்றி பெற்றுள்ளது. இந்து பாசிச மதவெறிக் கட்சியான பிஜேபி போன்றவைகள் இராமனை வைத்து வட நாட்டில் பதவிக்கு வந்தது போல் இங்கே அது எடுபடாத நிலை.
ஆகவே திராவிடக் கொள்கைகள் தோற்றுப் போகவில்லை. திராவிடக் கொள்கைகளில் கிளைத்த அரசியல் கட்சிகளால் அப்படி ஒரு புறத்தோற்றம். அவ்வளவுதான்.
வெப்ஈழம்: வரவிருக்கும் தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தல் குறித்து உங்கள் கழகத்தில் நிலைப்பாடு என்ன? உங்களின் கணிப்பின்படி எந்தக் கட்சி வெல்லும் என எதிர்பார்க்கின்றீர்கள்?
வீரமணி: நாங்கள் அரசியல் கட்சி அல்ல; தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை, இன்னும் எங்களுக்கென்ன ஆத்திரம், அவசரம்?
பிறகு அறிவிக்க வேண்டிய நேரத்தில் யாரை ஆதரிக்க வேண்டுமா அதை அறிவிப்போம்!மதவெறிக் கட்சிகளையோ அவர்களுடன் கூட்டுச் சேருபவர்களையோ ஒருபோதும் திராவிடர் கழகம் ஆதரிக்காது.
வெப்ஈழம்: சில காலங்களின் முன்னர் நீங்கள் பகவக்கீதை சம்பந்தமாக ஒரு புத்தகம் வெளியிட்டதாகக் கேள்விப்பட்டோம். அதிலிருந்து சில தகவல்களை எமக்கு சொல்லுவீர்களா?
வீரமணி: கீதை - ஒரு வர்ணாசிரமப் பாதுகாப்பு நூல்.
ஜாதி தர்மத்தை - ஆத்மா புரட்டு மூலம் கர்ம வினைப் பயன் என்று காட்டி ஒடுக்கப்பட்ட மக்களை அடிமையாக்குகிறது. பெண்களை இழிவுபடுத்தி `பாபயோனியிலிருந்து பிறந்தவர்கள்’ என்று கூறுகிறது.
இப்படிப் பலப்பல. கீழே உள்ள வடமொழி சமஸ்கிருத சுலோகங்களைப் படியுங்கள்.
"நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம .உற்பத்தியாளனாகிய என்னால் முடியாது.’’
"சாதுர் வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் கண கர்ம விபாகச:தஸ்ய கர்த்தாரமபிமாம் வித்யகர்த்தார மவ்யயம்’’(அத்தியாயம் 4, சுலோகம் 13)
இந்த உலகத்தில் மட்டும்தான் இத்தகைய நான்கு வகை வர்ண தர்மம் உண்டு. மறு உலகத்தில் இது இல்லை.
"காங்கஷ்ந்த்: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதாக்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்ப் பவதி கர்மஜா’’(அத்தியாயம் 4, சுலோகம் 12)
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் (Born out of the womb of sin)
"மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே பி ளுயு பாப யோனயஸ்த்ரியோ வைச்யாஸ் ததா சூத்ராஸ்தேளுபி யாந்தி பராங்கதிம்
(அத். 9 சுலோகம் 32)கீதையின் மறுபக்கம்: பக்கங்கள்: 83,84,85
வெப்ஈழம்: விஞ்ஞானம் மிகவும் வளர்ந்துள்ள இந்த மேற்கத்தேய நாடுகளில்கூட எமது தமிழர்கள் கோயில்களைக் கட்டி அலகு குத்தி காவடி எடுக்கின்றார்கள். நிறைய செலவு செய்து யாகங்கள் செய்கின்றார்கள். மனிதர்களை கடவுள் என்று வழிபடுகிறார்கள். இவர்களுக்கு உங்கள் புத்திமதி என்ன?
வீரமணி: படிப்பறிவு வேறு, பகுத்தறிவு வேறு. மூடநம்பிக்கை, அறியாமையைவிட கொடுமையான நோய் மனிதர்களுக்கு வேறு கிடையாது!காலங் காலமாக கடவுள் வழிபாட்டால் மனிதர்கள் அடைந்த துன்ப, துயரத் தடுப்பு உண்டா?
ஈழத் தமிழர்களை புலம் பெயர வைத்த கதிர்காமக்கந்தனும், யாழ்ப்பாண சிவனும் என்ன செய்தார்கள் - `தமிழன் மாமிசம்’ இங்கே கிடைக்கும் என்று சிங்கள இனவெறி ஓங்காரக் கூச்சல் இட்டபோது?
`சுனாமி’யில் இலங்கை மக்கள் கொல்லப்பட்டார்களே, கருணையே வடிவான, எங்கும் நிறைந்த, எல்லாம் வல்லவனாக் கூறப்படும் கடவுள் தடுத்தாரா?
இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு இழப்பா? சிறப்பா? ஈழ விடுதலைக்கு அப்பொருளைச் செலவழித்தால் மனித உரிமையாவது பாதுகாக்கப்படுமே!
வெப்ஈழம்: திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா பிரிந்த பொழுது அவரைக் கடுமையாக விமர்சனம் செய்த பெரியார் பின்பு பொதுநலநோக்கில் அவரை ஆதரித்தார். நீங்களும் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் நட்புடன் இருந்து வருகின்றீர்கள். பொதுநலனுக்காய் இணைந்து போராடியும் இருக்கின்றீர்கள். இதே போன்று தற்பொழுது உங்களுடன் இருந்து பிரிந்து தனிக் கழகங்களை நடத்தி வரும் கொளத்தூர் மணி போன்றவர்களுடன் ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் இணைந்து போராட தயாராக இருக்கின்றீர்களா?
வீரமணி: ஈழ தமிழர்களுக்காகப் போராடுவது எங்களது வேலைத் திட்டம்! மற்றவர்களுடன் இணைந்துதான் போராட வேண்டும் என்பது அவசியமில்லை.
ஈழத்தில் கருணா குழுவினருடன் தலைவர் பிரபாகரனை இணைந்து போராடுங்கள் என்று கேட்பீர்களா?
எனவே துரோகத்தோடு சமரசம் செய்ய முடியாது. அதனால் லட்சியப் பணி குன்றாது.
வெப்ஈழம்: ஈழப்போராட்டத்திற்கான ஆதரவு தமிழ்நாட்டில் என்ன நிலையில் தற்பொழுது உள்ளதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்?
வீரமணி: நீறு பூத்த நெருப்பு - அணையாத நெருப்பு - அதனை டிசம்பர் 29ஆம் (2005) தேதி பெரியார் திடலில் நடந்த ஈழத் தமிழர் பாதுகாப்புக் கூட்டத்தின் மூலம் அறிய முடிந்தது. அதன் தாக்கம்தான், தமிழக முதல்வரை சிங்கள அதிபரைச் சந்திக்காமல் செய்ய வைத்தது!
நன்றி - வெப்ஈழம்
அது சரி பெண்களும்(பிராமண, சத்திரிய பெண்களுமா?), சூத்திரர்களும், வைசியர்களும் பாப யோனியிலிருந்து பிறந்தவர்கள்.(யோனி பாவமா? பின் எதற்கு அதை வணங்குகிறார்கள்?, யோனி பாவமெனில் லிங்கம்(!)?).
அப்ப பிராமணர்களும், சத்திரியர்களும் எங்கிருந்து பிறந்தா(பிறக்கிறா)ர்களாம்? புனிதமான(!) லிங்கத்திலிருந்தா?
விபரமறிந்தவர்கள் சற்று விளக்குங்களேன்.

Subscribe to:
Posts (Atom)